2017 மார்ச் இறுதிக்குள் ஆதார் அட்டையை நேரடி மானிய திட்டத்துடன் 100 சதவீதம் இணைக்க இலக்கு
2017 மார்ச் இறுதிக்குள் ஆதார் அட்டையை நேரடி மானிய திட்டத்துடன் 100 சதவீதம் இணைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களின் உதவிகள் மக்களை நேரடியாக சென்று அடைவதற்கு வசதியாக ஆதார் அட்டையை நேரடி மானிய திட்டத்துடன் இணைத்து வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ், 17 அமைச்சகங்களைச் சேர்ந்த 74 திட்டங்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும், ஆதார் அட்டையை நேரடி மானிய திட்டத்தின் கீழ் இணைக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை.
இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேரடி மானிய திட்டத்தின் கீழ், 30 கோடி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்துக்காக 100 சதவீதம் ஆதார் அட்டையை இணைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நல உதவிகள் மற்றும் மானிய திட்டங்களும் நேரடி மானிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதனால் 2017 ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்திருப்பவர்கள் மட்டுமே நேரடி மானிய திட்டத்தின் உதவிகளைப் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Reviewed by Tech Tamizha
on
13:57
Rating:
No comments: